அமைச்சர் ரிசாத் துரத்தப்பட்டார்- உலமா கட்சியின் வியுகம் வெற்றி பெற்றது

ல்முனைக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட சதிகளை முறியடித்து முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் வென்றெடுத்த கல்முனை மற்றும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் போற்றுதலுக்குரியவர்கள் என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்த போது,

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இப்பகுதியில் இருந்தவர்கள் மீது பாரிய அதிருப்தி மக்களிடம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனை நீக்கி தமது இறைமையையும், தன்மானத்தையும் காத்து சுயமான காலில் நின்று கொண்டு பரந்து பட்ட சேவையை பெறுவதாயின் கல்முனை தலைமையிலான கட்சியை பலப்படுத்துவதன் மூலமே முடியும் என்பதே எமது கட்சியின் உறுதியான கொள்கையாகும்.
 ஆனாலும் முஸ்லிம் காங்கிரசின் பலவீனம் காரணமாக இன்னொரு வெளி அமைச்சரினால் இம்மக்கள் பாதிக்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும், கல்முனை, சம்மாந்துறையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்பதை எமது கட்சி கண்டது. 

ஒரு அமைச்சர் தலைமையிலான கட்சியின் இந்த சதியை அனுமதித்தால் கல்முனைத்தொகுதி அரசியல் அனாதையாகி நாளை பாரிய இனவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம். அதே போல் சம்மாந்துறை மக்களும் தொடராக அரசியல் அனாதையாகலாம். இவற்றையெல்லாம் தீர்க்கமாக ஆலோசித்த பின்னர்தான் நாம் முடிவெடுத்தோம் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அம்பாரை மாவட்டத்தில் ஆதரிப்பது என. மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான கடச்pக்கு ஆதரவு பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசக்கு ஆதரவு என்ற எமது நிலைப்பாடு பலருக்கு முரண்பட்டதாக தெரிந்தாலும் அரசியல் வரலாற்றில் ஒரு புதுமையை ஏற்படுத்தி காட்டியுள்ளோம்.

எமது இந்த ஆதரவு காரணமாக பலரும் எம்மமை கடுமையாக விமர்சித்தனர். தோற்கப்போபவர்களுக்கா உங்கள் ஆதரவு என கேட்டனர். நாம் ஆதரவு தருபவர் தோற்பார் என்றும் கிண்டலடித்தனர். இவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு நாம் மக்களுக்கு பகிரங்கமாக விளக்கமளித்தோம்.
கடந்த காலங்களை விட மக்கள் இம்முறை ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசின் வேற்பாளர்களுக்கு வாக்களித்துள்ளமைக்கு பிரதான காரணம் உலமா கட்சியின் ஆதரவு என்பதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்த உலமா கட்சியே அதன் வேற்பாளர்களை ஆதரிக்கும் போது தாம் எம்மாத்திரம் என தழும்பல் நிலையிலிருந்த மு. கா வின் வேற்பாளர்களை சிந்திக்க வைத்தது.

அமைச்சர் ஒருவரும் அவரது கல்முனையை சேர்ந்த கல்முனை பற்றிய அக்கறையற்ற இணைப்பாளரும் பல கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளி இறைத்தும் அவர்களால் ஒரு பிரதிநிதியைக்கூட பெறமுடியவில்லை என்பதும் கல்முனை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செய்த சதி நிறைவேறவில்லை என்பதும் வரலாற்று நிகழ்வாகும். இதனை சரியாக புரிந்து கொண்ட அம்பாரை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களுக்கு உலமா கட்சி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதோடு தெரிவு செய்யப்பட்ட மூன்று வேற்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக முபாறக் மௌலவி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -