பி.எம்.எம்.ஏ.காதர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் மருதமுனை சித்தீக் நதீரின் ஐம்பது இலட்சம் ரூபா சொந்த நிதியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரியில் நிர்வாகக் கட்டம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2012-11-ம் திகதி இக்கட்டத்திற்கான அடிக்கல் நடப்பட்டது மருதமுனையில் தனிநபர் ஒருவர் ஐம்பது இலட்சம் ரூபா நிதி வழங்கிய தென்றால் அது சித்தீக் நதீர் வழங்கிய நிதிதான்.
இவற்றுடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கும் பல இலட்சம் ரூபாவில் தளபாடம் உள்ளீட்ட ஏனைய உபகரணங்களும் அவரது நிதியில் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் பல விளையாட்டுக் கழகங்களுக்கும் சமூக சேவை நிறுவனங்களுக்கும்,தனி நபர்களுக்கும் பல்வேறுபட்ட உதவிளை சித்தீக் செய்துள்ளார் மருதமுனைக்கு மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தில் ஏனைய தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கும் தனது சொந்த நிதியில் உதவிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


