அம்பாரை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் பிரிவில் தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரையும், அவர்கள் பயணித்த வேனையும் சவளக்கடை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து நேற்று சனிக்கிழமை இரவு சாளம்பைக்கேணி-05 5ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதாரவளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையையும் சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
