எழுதியவர் அவதானிலங்கா வெப்)
ஒவ்வொரு புதிய அரசாங்க ஆட்சியின் போதும் தேசியப் பட்டியலுக்காக குட்டிபோட்ட நாய் போல் சுற்றிசுற்றி வரும் சிரச ஊடக வலயமைப்பின் உரிமையாளர் கிளி மகாராஜா ஸ்ரீ ரங்கா மற்றும் டிரான் அலஸ் ஆகியோருக்கு தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும்படி ஜனாதிபதி மைதிரிபாலவுக்கு நிர்பந்தித்து வருவதாக அறியக்கிடைத்திருக்கிறது.
தற்போது லண்டனிலுள்ள கிளி மகாராஜா ஒரு நாளைக்கு பல தடவைகள் தொலைபேசி மூலம் இந்த நிர்பந்தத்தை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
மைத்திரிபால இதனை செய்யாவிட்டால் ஏற்கெனவே ரணிலுக்கு நேர்ந்தது தான் நடக்கும் என்று தனது சகாக்களிடம் பேசி வருவதாக அறியக்கிடைக்கிறது.
ஏற்கெனவே 2004 ஆண்டு தேர்தலின் போது ரணில் தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாததால் ரணிலுக்கு எதிராக தமது முழு ஊடக பலத்தையும் பிரயோகித்து பலவீனபடுத்தியிருந்தார் மகாராஜா.
அதே வழிமுறையை மகிந்த ராஜபக்ஷவிடம் பிரயோகிக்க மோற்சித்த போது மகாராஜா வாங்கிக்க்கட்டிக்கொண்டார். சிரச ஊடக நிறுவனம் 2009 ஜனவரியில் தீ பற்றி நாசமானது. அதன் பின்னர் மகராஜா நிறுவனம் நிபந்தனையின்றி மகிந்தவுக்கு ஆதவளிக்கத் தொடங்கியது. ஸ்ரீ ரங்கா, டிலான் அலஸ் போன்றார் மகிந்தவின் கைப்பாவை ஆனார்கள். மகாராஜாவுக்கு தெரிந்த ஒரே மொழி "தீ பற்றவைப்பு " மாத்திரமே என்று கோத்தபாய வெளியிடங்களில் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் வருடாந்தம் மகாராஜா நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாரிய வெசாக் நிகழ்வுகளுக்கு கூட கோத்தபாய தான் பிரதம அதிதி. டிலான் அலஸ் தற்போது ஊழல் குற்றாச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர். அதுபோல ஸ்ரீ ரங்கா மோசமான ஊடக, அரசியல் மோசடிகளை செய்து தற்போது பிரபலமாகியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
