அபூ முஸ்னி இர்ஸாத் ஜமால்-
மத்திரயதரைக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அகதிகளை மீட்பதற்கு எந்த நாடுகளும் எத்தனிக்காத நிலையில்,ஆபிரிக்க நாடுகளின் ஒன்றியத்தில் அகதிகளுக்கு அடைக்களம் கொடுக்குமாறு பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரனையை தொடர்ந்நது கடலில் தத்ளிக்கும் அகதிகளுக்கு புகழிடம் வழங்குவதில் சில ஆபிரிக்க நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றது. இருந்த போதும் சுலோவாக்கிய அரசானது கிரிஸ்தவ மதத்தை பின்பற்றும் அகதிகளை பொருப்பேற்ற போதும் முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்களம் கொடுப்பதற்கு மறுத்துவிட்டது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இவன் மேட்டிக் 'முஸ்லிம் அகதிகளை எமது நாட்டிற்குள் உற்பிரவேசிப்பதற்கு நாம் விரும்பவில்லை' என தெரிவித்துள்ளார்.
ஐ.நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு மையம் மதங்களை பாராது பொது அடிப்படையில் அகதிகளுக்கு அடைக்களம் கொடுக்குமாறு வேண்டிக்கொண்ட பிற்பாடும் ஐ. நாடுகள் சபையின் வேண்டுகோலை சுலோவாக்கிய அரசு நிராகித்து வருகின்றது.
உள்நாட்டு யுத்தம் மற்றும் வருமை காரணமாக சிரியா, பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
