ஆர்.ரஸ்மின்-
முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரும், தற்போதைய உள்ளளூராட்சி ஆணையாளரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருமான திரு.குகநாதன் என்பவரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் கமலநாதன் விஜிந்தன் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வேட்பாளர் எழுத்து மூலம் முள்ளியவளை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜானாதிபதி, பிரதமர், பொலீஸ் மா அதிபர்,அரசாங்க அதிபர் (முல்லைத்தீவு), உதவித் தேர்தல் ஆணையாளர் (முல்லைத்தீவு), தேர்தல் கண்காணிப்பு குழு (கபே, பெப்ரல்), மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை மாலை 5.56மணிக்கு 0777466350 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்திலிருந்து 0777394159 எனும் என்னுடைய கைத்தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரும், தற்போதைய உள்ள+ராட்சி ஆணையாளரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவருமான திரு.குகநாதன் என்பவர் தன்னை அடையாளர் காட்டிக்கொள்ளாது உரையாடினார்.
முள்ளியவளை பொன்னகர் பகுதியில் நான் உணவுப்பொருட்கள் வழங்குவதாகவும், முச்சக்கர வண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நான் அதற்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை. அப்படியாயின் ஆதாரத்துடன் வெளிப்படுத்துமாறு கூறினேன். ஆதற்கு அவர் என்னை மிகவும் தகாத வார்த்தையினால் ஏசியதுடன், நான் தற்போது தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள திரு. குகநாதன் எனக் கூறினார். மேலும் நான் நினைத்தால் உன்னை சிறையில் அடைக்கவும் முடியும் எனவும் மிரட்டினார்.
இது எனக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் உயர் அதிகாரி ஒருவர் வேண்டுமென்று என்மேல் வீண்பழி சுமத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் ஐக்கிய சேதியக்கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் என்பதால் என்னுடன் பக்கச்சார்பாகவும் நடந்துகொள்கின்றனர். உயர் பதவியிலுள்ள ஒரு உத்தியோகத்தர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியமை எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது.
இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறும், இவரின் இந்த நடத்தையினைக் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிட எனக்கு சந்தர்ப்பத்தை தந்துதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளன.


