அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்

ஏ.எச்.எம்.பூமுதீன்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ;போட்டியிடும் அ.இ.ம.கா வின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் நெருங்கிய ஆதரவாளர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரதசியமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளரான அமீன் என அழைக்கப்படும் 32 வயதுடைய இளைஞரே இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முகா சார்பில் போட்டியிடும் ஓட்டமாவடியைச் சேர்ந்த வேட்பாளரின் உத்தரவின் பெயரிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்குடா தொகுதி மக்கள் ஒன்று பட்டு தமக்கு என ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் இன்றைய சூழ்நிலையை குழப்பி அடிக்கும் நோக்கில் முகா தலைவர் ஹக்கீம் பல்வேறு சதிநடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு அங்கமாகவே தான் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவரை நியமித்து கல்குடா தொகுதி பிரதிநித்துவத்தை இல்லாதொழித்து வாக்குகளை சிதறடித்து கல்குடா தொகுதி மக்களை இல்லதொழிக்கும் செயற்திட்டமாகும்.

கல்குடா தொகுதி மக்கள் அமீர் அலி எனும் ஒரு மனிதனை தமக்கான ஒரு பிதிநிதியாக ஏற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் சதிகார நாசவேலையை முகா தரப்பு மேற்கொண்டுள்ளது.

அமீர் அலியின் ஆதரவாளரான இந்த அமீனின் படுகொலை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இழந்துள்ள பாரிய இழப்பை ஈடு செய்ய முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் தனது வங்குரோத்து உச்சக்கட்டமாகவுமே அ.இ.ம.கா தவிசாளர் அமீர் அலியின் நெருங்கிய சகாவான அமீனின் படுகொலை இன்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் நோக்கப்படுகின்றது.

இந்த படுகொலை குறித்து கேள்வியுற்ற அ.இ.ம.கா தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் பெரும் அதிர்ச்சியும் கவலையையும் அடைந்துள்ளதுடன் தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -