வெளிநாட்டில் கஷ்டங்களை எதிர்நோக்கிய பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பியுள்ளனர்!

வெளிநாட்டில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் புரிய சென்றிருந்த நிலையில், பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்த 56 பெண்கள் இன்று காலை 6.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள், சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் தொழில் புரிய சென்றிருந்தனர். அங்கு அவர்கள் பணியாற்றிய வீடுகளில் பல்வேறு கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.

இதன் காரணமாக குறித்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் தஞ்சமடைந்த அவர்கள், அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டுடன் இந்த பெண்கள் இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -