களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி களுத்துறை தேர்தல் தொகுதியில் 652 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது.
அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் குறித்த கட்சி 131 வாக்குகளை பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40,837 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி வாக்குகளையும் 39,525, மக்கள் விடுதலை முன்னணி 5,775 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான முடிவுகளில் படி நாகபாம்பு சின்னத்தில் பொது ஜனபெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனா அது போட்டியிட்ட மாவட்டங்களில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வருகின்றது. பேருவளை தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 2,119 வாக்குகள் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 2,119 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 47,987 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33,142, வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 3,670 வாக்குகளையும் பெற்றுள்ளது. மத்துகம தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 953 வாக்குகள் களுத்துறை மாவட்டத்தில் மத்துகம தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 953 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38,114 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 35,267 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 4,087 வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஹொரன தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 290 வாக்குகள் களுத்துறை மாவட்டத்தில் ஹொரன தேர்தல் தொகுதியில் ‘நாகபாம்பு’ 290 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50,024 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி 36,325 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 5,037 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
