ஹிஸ்புல்லாவும் வன்முறையும் : ஒரு குறிப்பும் கடிதமும்

முஸ்டீன்-


01. குறிப்பு

தோற்றால் மட்டுமே அடங்கிப் போகும் ஹிஸ்புல்லாவுக்கு வன்முறை ஒன்றும் புதிதில்லை. 2000மாம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லா கல்குடா மக்களால் தோற்கடிக்கப்பட்டார். 

அப்போது அடங்கிப் போய் இருந்தார். ஆயினும் அவர் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற அவரது ஆதரவார்களின் வாய்ப்பேச்சுதான் 2001 பொதுத் தேர்தலின் பின்னர் ஓட்டமாவடி பசாரில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்தர்வகளின் கடைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து துரத்துவதற்கான விதையைத் தூவியது. 

அது ஒரு கலவரம் போல நடந்து முடிந்தது. நடுநிலைமையாளர்களினால் மிகவும் காரசாரமாக விமர்சிக்கவும் பட்டது. பிரதேச வாதம் தலைதூக்கி ஒரு ஆட்டம் ஆடி அடங்கியது. 2004 பொதுத் தேர்தலில் மீண்டும் ஹிஸ்புல்லா தோற்றுப் போனார் அப்போது அடக்க ஒடுக்கமாக நல்லபிள்ளையாக அமைதி காத்தார். 

அந்தக் காலப்பகுதியில் எப்படியாவதுவென்றுவிட வேண்டும் என்றுதான் தலைகால்புரியாமல் அரசபடைகளைக்கொண்டு ஆட்டம் பேர்டடார் அவர். காவத்தமுனைப் பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பலரைக் காயப்படுத்தி பார்வையிழக்கச் செய்யும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக இருந்தன. தோற்ற மாத்திரத்திலேயே அவர் அடங்கியிருந்தார் இல்லாவிட்டால் நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருந்திருக்கும்.

2010 பொதுத் தேர்தலில்காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும் கல்குடாவில் அமிர் அலியும் ஒரே கட்சியில் போட்டியிட்டனர் ஆயினும் வெற்றி பெற்றதோ ஹிஸ்புல்லாதான்.

பின்னர் தோற்றுப் போன அமீர் அலியின் ஆதரவார்கள் மீது ஹிஸ்புல்லாவின் சண்டியர்கள் அவிழ்த்துவிட்ட வன்முறைகளுக்கு அளவிருக்கவில்லை. ஒரே கட்சியினர் என்பதற்கான எந்த அடையாளமும் அங்கிருக்கவில்லை. 

வீடு புகுந்து அடித்துச் தேசமாக்கும் அளவுக்கு வெறித்தனம் அவர்களில் குடிகொண்டிருந்தது, அடித்தவர்களைவிட அடிவர்கிய பலர் சிறைக்குச் சென்றார்கள். பொலிஸ் அதிகாரம் முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த அந்த அதிகாரம் முயலவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக தமது பாதிப்புக்கள் குறித்து முறையிட்டனர். பின்னர் ஒரு வழியாக பொலிஸ் உயர்மட்டத்தின் தலையீட்டுடன் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

இத்தனை காலமும் எதிர்ப்பு அரசியல் காத்தான்குடிக்கு வெளியில்தான் இருந்தது. ஆனால் 2015 பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவின் கோட்டையில் இருந்தே போட்டிக்கு ஆள் கிளம்பியதன் விளைவாக தோற்றுப் போய் அடங்கியிருந்த ஹிஸ்புல்லாவுக்கு எதிர்பாராதவிதமாக தேசியப்பட்டியல் அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் மூர்க்க குணம் மீண்டும் உயிர்ப்பு பெற்றது அது இம்முறை ஆடியிருக்கும் வெறியாட்டம் அவரது சொந்த மண்ணிலேயேதான். 

02. கடிதம்


அன்புள்ள ஹிஸ்புல்லாவுக்கு!

மேற்குறிப்பிட்ட பின்னணிகளின் பால் நின்று உங்களுக்கு ஒரேயொரு ஆலோசனையைச் சொல்லமுடியும். 

தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எம்பியாக இருங்கள் அல்லது அமைச்சராக இருங்கள் அல்லது அதற்கப்பால் எதுவாக வேண்டுமானாலும் இருங்கள். 

எந்த அரசியல் எல்லைக்குள்ளும் இல்லாமலிருக்கும் என்னால் இந்த வேண்டு கோளை மட்டும்தான் விடுக்க முடியும். நீங்கள் வளர்த்தெடுத்த கைக்கூலிகளாலேயே உங்கள் உயிர் எப்போதோ பறிக்கப்பட்டிருக்கும், ஆயினும் அப்போதைய நிலையில் முஸ்லிம் அரசியலுக்காக அம்முயற்சியை முறியடிக்க வேண்டிய தேவையை முக்கியமானதாகக் கருதியமையினாலும் அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை இறைவன் தந்திருந்மையினாலும் உங்களைப் பாதுகாக்கும் பணியினை அப்போது செய்தவன் என்ற வகையிலும் கேட்கின்றேன் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் சண்டித்தனத்தை மக்களின் மனங்களை வெல்லும் வகையில் காட்டுங்கள். உங்கள் தொண்டர்களின் தைரியத்தை மக்களின் நலனுக்காகச் செலவழிக்கச் சொல்லுங்கள். 

காலம் எப்போதும் ஒரு மாதிரி இருப்பதில்லை, சாட்சியங்களும் சான்றுகளும் இல்லாவிட்டால் சட்டத்தின் முன்னால் எல்லோரும் நிரபராதிகள்தான் என்பது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும். வன்முறையை வன்முறை ஊக்குவித்தால் இழப்பு உங்கள் ஊருக்கும் உங்கள் சகோதரர்களுக்கும்தான். எதற்கும் வன்முறை தீர்வல்ல என்பதை இன்னும் தாங்கள் புரிந்து கொள்ளவில்லை. உங்களால் உருவாக்கப்பட்ட பல வன்முறையாளர்களின் முடிவு கூட உங்களுக்கு அதை இன்னும் கற்பிற்க வில்லையென்பது ஆச்சரியமாக இருக்கின்றது. 

முஸ்லிம் அரசியலில் மாற்றம் வேண்டிய ஒரு இளைஞர் சக்தி சிறு ஓடை போல பயணிக்கத் தொடங்கிவிட்டது. அது இன்னும் வீரியம்பெற்று ஓடத் துவங்கும் போது நிலமைகள் வேறாக இருக்கும். ஒரு பிரளயத்துக்கு முன்னால். 

அதில் அள்ளுண்டு செல்வதற்கு முன்னால் நல்லவைகளை விதைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இப்போது நீங்களி விதைப்;பவைகளைத்தான் பின்னாளில் அறுவடை செய்வீர்கள். சில விடயங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்குத் தூய்மை போதாது. அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களைப் போன்ற அரசியல் யாவாரம் பண்ணும் பலருக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கின்றேன். 

இங்கு சொல்லப்பட்டவைகளை உங்கள் புத்திக்கொப்ப கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும். இப்படிப் பகிரங்கமாக மடல் எழுதும் தைரியம் சும்மா வந்ததல்ல அதற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. எந்த வட்டத்திற்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாத, எந்த அரசில் சாயத்தையும் பூசிக்கொள்ளாத எந்த இயக்கச் சாக்கடைக்குள்ளும் விழுந்துவிடாத ஒன்றுஎன்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு முறையும் வாக்குப் போட்டுத் தோற்றுப் போகும் புத்தியில்லாத பொது மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் உங்கள் அடாவடித்தனங்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அரசியல் வசனங்களால் எந்த விளக்கமும் அளிக்காமல் உடனடியாக அத்தனையையும் நிறுத்திக் கொள்ளுங்கள். 

இறைவனைவிஞ்சிய அதிகாரம் எதுவும் உலகில் கிடையாது.

இறைவனுக்கு முற்றிலும் சரனைடைந்த சிறு துரும்பையும் எந்த வம்பனாலும் அசைக்கவும் முடியாது.

நன்றி
வஸ்ஸலாம்
அன்புடன் 
எழுத்தாளர் முஸ்டீன் 
இயக்குநர் - ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -