பிரபல அட்லஸ் நகைமாளிகை உரிமையாளரும் அவரது மகளும் துபாயில் கைது -படத்துடன் விளக்கம்


துபாயில் உள்ள சுமார் 15 வங்கிகளில் ஐந்தரை கோடி திர்ஹம்களை கடனாக வாங்கிய இந்தியாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளை துபாய் போலீசார் கைது செய்துள்ளதாக பிரபல அராபிய நாளிதழான அல் கலீஜ் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் எம்.எம். ராமசந்திரன் தொழிலதிபர் இங்குள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் ஐந்தரை கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் நூறு கோடி ரூபாய்) கடன் வாங்கியுள்ளார்.

துபாயின் பல பகுதிகளில் அட்லஸ் ஜூவல்லரி குழுமம் என்னும் தொடர் நகைக்கடைகளை நடத்திவரும் அவர், மேற்படி தொகையை தங்கத்தில் முதலீடு செய்ததாக தெரிகிறது. சமீபகாலமாக சரிந்து வரும் தங்கத்தின் விலையால் அவர் தொழிலில் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய கடன் தொகையின் தவணைக்காக அவர் அளித்திருந்த காசோலைகள் அனைத்தும், அவரது வங்கிக் கணக்கில் போதிய பண இருப்பு இல்லாமையால் ‘பவுன்ஸ் ஆகி’ திரும்பி வந்தன.

இதேபோல், துபாயில் இதே நகைக்கடை குழுமத்துக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்துவரும் அவரது
மகள் அளித்திருந்த பல லட்சம் திர்ஹம் மதிப்புடைய பதினைந்துக்கும் மேற்பட்ட காசோலைகளும் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்தன.
இதையடுத்து, கடன் கொடுத்த வங்கிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் அந்த நகைக்கடை அதிபரையும், அவரது மகளையும் கடந்த 23-ம் தேதி துபாய் போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மோசடியை செய்துவிட்டு, தந்தையும் மகளும் இந்தியாவுக்கு தப்பியோடி விட்டதாக முன்னர் வெளியான செய்திகளை அல் கலீஜ் வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கைதான ராமசந்திரன் சில மலையாள படங்களை தயாரித்தும், நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமன் நாட்டில் இவருக்கு சொந்தமாக ஒரு தனியார் மருத்துவமனை உள்ளதாக கூறப்படுகிறது,
விகளத்தூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -