புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பகிரங்கப்படுத்துவதற்கு தடை !

2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது. 

அதன் பிரகாரம் பரீட்சைக்கான வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதியின்றி பரீட்சை கண்காணிப்பாளர்கள் வைத்திருப்பதற்கோ அல்லது சட்டப்படி வௌியடுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாக வௌியிடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தலை மீறுவோர் அல்லது மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவுறுத்தலை மீறி செயற்படுவோர் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பாரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -