இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு நஸீர் MPC அநுதாபம்

பைஷல் இஸ்மாயில் –

ந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியாகவும், தொழில் நுட்ப வல்லுநராகவும், குடியரசு தலைவராகவும், பாரதமண்ணின் சாதி, மத பேதங்களற்ற முறையில் அனைத்து மக்களாலும் வரணிக்கப்பட்ட விஞ்ஞானி ஏ.பீ.அப்துல்கலாமின் மரணச் செய்திகேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தனது அநுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும்தெரிவித்துள்ளதாவது,

இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த எண்ணற்ற இளைஞர்களை வழிநடாத்திய சகாப்தம் தனது 84 வது வயதில்ஓய்ந்துவிட்டு இந்த உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டு மறுஉலக வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்துவிட்டார்.

மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதியின் எளிமையான வாழ்க்கையும் அவரது எளிமையான பேச்சும்எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்திருந்தது. அவர் உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும், ஏழை மக்களின் தோழனாகவும், மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், மற்றயவர்களின் கஷ்டங்களை தனது கஷ்டமாக உணர்ந்து செயற்பட்ட ஒரு நற்குனம் படைத்து உலகம் போற்றும் சிறந்த மாமனிதரை இன்று உலகமக்கள் இழந்திருப்பது என்பது இதுவொரு மாபெரும் பேரழிப்பாகும் என்றுதான் கூறலாம்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றுக்காக பங்கேற்கச் செல்லும் முன்னர் தனது டுவிட்டரில் ”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில் IIM மாணவர்களுக்கு உரையாற்ற Shillongசெல்கிறேன் என்ற தகவலை டுவிட்டரில் பதிந்துவிட்டுச் சென்று அங்கு அவர் உரையாற்றும்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தனது மரணத்தை சுவைத்துக்கொண்டார். இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னாரின் இழப்பால் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கும், அந்நாரது குடுபத்தினருக்கும் எனது ஆழ்ந்தஅனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன் என்றும்குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -