ஏறாவூரில் முச்சகரவண்டி விபத்துக்குள்ளானதில் முன்னாள் தவிசாளரின் தாய் மரணம். 2பேர் காயம்




முஹம்மட் அஸ்மி-
றாவூர் புன்னைக்குடா வீதியில் - ஜிப்ரி தைக்கா பள்ளிவாசலுக்கு அருகில் இன்று அதிகாலை நடந்த ஆட்டோ விபத்தில் - தாய் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் -

இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புன்னைக்குடா வீதி வழியாக சென்ற ஆட்டோ வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மத்தியில் வைக்கப்பட்டிருந்த பூச்சட்டிகளில் மோதுண்டதில் ஏறாவூர் A .K . M . வீதியில் வசிக்கும் முன்னாள் ஏறாவூர் பிரதேச சபையின் தவிசாளரும் - தற்போதைய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் இணைப்புச் செயலாளருமான அப்துல் நாசர் அவர்களின் தாய் மரணம் அடைந்ததுடன் - மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் -

இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றுவதற்காக காத்துக் கிடக்கும் ஒரு சில ஆட்டோ சாரதிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியும் - யார் முந்தி செல்வது ? அடுத்த பயணிகளை யார் உடனடியாக திரும்பி வந்து ஏற்றி கொள்வது ? போன்ற காரணங்களால் அவர்களின் வேகம் கூட்டப்பட்டு - கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொள்வதே இவ்வாறான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப் படுகிறது -

இவ்வாறான போட்டியும் கவனயீனமுமே இன்று அநியாயமாக ஒரு தாயின் உயிரைப் பறித்துச் சென்றுள்ளது என சம்பவ இடத்தில் இருந்தோர் கருத்தாடுகின்றனர். 
எது எவ்வாறாயினும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நிலைக்கு ஆளாகாமல் பரந்த சிந்தனையுடன் ஒவ்வொன்றையும் அனுக வேண்டும்.
குறிப்பாக வாகன சாரதிகள் கவனயீனம். சிலர் மிக மோசமாக வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். இன்று அரச பேருந்துகள் சட்டவிதிகளையும் தாண்டி அதிவேகத்தில் ஒன்றை ஒன்று முந்திச்செல்வதனைப் பார்க்க கிடைக்கிறது.
இதனை பொதுமக்கள் தடுத்து கேட்டால் அவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் என்றும் தாக்கப்பட்டார்கள் என்றும் போராட்டம் செய்வதும் காணக்கிடைக்கிறது.

எனவே போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவினர்  குறித்த விடையத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -