மூத்த போராளி-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையில் வழங்கப்பட்ட நியமனங்களில் விகிதாசாரத்திற்கேட்ப அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்த மிக வறிய, வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல சிரமப்படும் சிங்கள குடும்பங்களுக்கு நூற்றுக்கணக்கான நியமனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களால் சுகாதார மற்றும் சுதேச வைத்திய திணைக்களங்களில் வழங்கப்பட்ட நியமனங்களில் விகிதாசாரத்திற்கேட்ப அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்த வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல சிரமப்படும் சிங்கள குடும்பங்களுக்கு நியமனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டதும் குறிப்பிட்டுக்கூற வேண்டிய ஒரு விடயமாகும்.
மேலும் அம்பாரை சிங்கள தலைமைகள் மீது விரக்தி அடைந்துள்ள சிங்கள மக்கள் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீதும், தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாக அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேச மக்கள் தாமாகவே முன்வந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று 2015.07.14 ஆந் திகதி அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும் சிறப்புரை ஆற்றியதுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். அத்துடன் 2015 பாராளுமன்ற தேர்தலில் தங்களுடைய வாக்கினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வழங்குவதாகவும் உறுதியளித்தமையும் வரவேற்க கூடிய விடயமாக இருந்தது.




