மல்வத்த பீடாதிபதி மாநாயக்கர் தேரா திப்பிட்டுவாவ சுமங்கள தேரரை சந்தித்த அமைச்சர் ஹலீம்-படங்கள்


இக்பால் அலி-

ண்டியில் பொதுத் தேர்தலை நீதியாகவும் நியாயமாகவும் நல்லாட்சியிலுள்ள சமாதானத்தை தொடர்ந்து கட்டி எழுப்புதற்கும் வகையிலும் செயற்படவுள்ளதாக என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

மல்வத்த பீடாதிபதி மாநாயக்கர் தேரா திப்பிட்டுவாவ சுமங்கள தேரர் அவர்களுக்கும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று 15-07-2015 நடைபெற்றது. இந்தச் சந்திப் போன் போது மாநாயகதேரரிடம் அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அதேவேளை அஸ்கிரிய பீட மாநாயக்க தேரரையும் அமைச்சர் இன்று சந்தி உரையாடினார். இதில் அக்குரணை , பூஜாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ ஆகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு கருத்துக் கூறுகையில்
1988 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கண்டி மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதுவரைக்கும் என்னுடைய பெயருக்கு எந்தக் கலங்கமும் ஏற்பட வில்லை. என்னுடைய தேர்தல் தொகுதியில் பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வாழ்கின்றனர். அத்துடன் முஸ்லிம் தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இதுவரைக்கும் இந்தப் பகுதி மக்கள் ஒற்றுமையுடவே வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையை நான் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதன் காரணமாகவேல நான் இன்று வரை தோல்வி அடையாமல் நிலைத்து நிற்கின்றேன்.

தேர்தல் காலங்கள் வரும் போது சிலர் இன பேதங்களை உருவாக்கி செயற்பட்ட போதிலும் மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ் ஹமீத் அவர்களுடைய மருமகன் என்ற வகையிலும் நேர்மையாமையாகவும் நேர்த்தியாகவும் நான் செயற்பட்டதன் காரணமா சிங்கள மக்கள் அதனை அங்கீகரிக்க வில்லை. இம்முறையும் அதி கூடிய விருப்ப வாக்குகளுடன் உறுதியுடன் பாராளுமன்றம் செல்வேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -