க.கிஷாந்தன்-
கண்டியில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்ற கெப்ரக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இறம்பொடை புலூபீல்ட் (பலாகொள்ள) பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து (19.07.2015) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த 5 பேரில் ஒரு பெண்மணி மரணமடைந்து கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நால்வரும் கொத்மலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தோரில் ஒருவர் பெண் ஆவார். மேலதிக விசாரனைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.