தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முஸ்லீம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கொலை செய்து எரித்து மகிந்த ராஜபக்சவின் மதப்படி மண்ணுக்குள் புதைப்பதாக தொலைபேசியூடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வர் கூறியுள்ளார்.
தனது கையடக்கத் தொலைபேசிக்கு பல தடவைகள் இலக்கம் ஒன்றிலிருந்து இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அச்சுத்தலைமுஸ்லீம் ஒருவரே விடுப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தென் மாகாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜகபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அஸ்வர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
