அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாகாணசபைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மொத்தமாக 11 கவிதைகள் உள்ளடங்களாக இந்த இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாரே நான் இதனைச் சொல்கின்றேன் மக்கள் மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் பயணம் இல்லாததனால் நிற்கின்றேன் இவ்வாறுஏற்றுக் கொள்ளுங்கள் என் இராஜினமாவை நீங்கள் என எழுதியுள்ளார்.
