பொத்துவில் தொகுதி மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாகத்தான் வாழ்ந்து மடிய வேண்டுமா?



ம்பாரை மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் கூடுதலான நிலப்பிரதேசத்தையும் 150,000க்கு மேற்பட்ட வாக்காளர்களையும் கொண்ட, தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற இரட்டை அங்கத்தவர்; தொகுதியாக பொத்துவில் விளங்குகின்றது. 

வடக்கே நிந்தவூரிலிருந்து தெற்கே பொத்துவில் பாணமை வரையும் சுமார் 60கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பாதையையும் இத்தொகுதி கொண்டிருக்கின்றது. களியோடைக்குத் தெற்கிலே 50,000 த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட அரசியலில் தீர்மானிக்கும் சக்திகளான பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை,ஒலுவில் போன்ற ஊர்களை இத்தொகுதி கொண்டிருக்கின்றது.

பல்கலைக்கழகம், உயர் கல்விக்கூடங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன. இத்தொகுதியின் வடகோடியிலே 20,000 வாக்காளர்களோடு இருக்கின்ற நிந்தவூர்க் கிராமம் தொடர்ந்தும் இத்தொகுதியை ஆண்டுவருவதன் மர்மத்தை துலக்கவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். 

உண்மையில் இது பிரதேச வாதமல்ல, ஆனால் தெற்கிலே வாழ்கின்ற எமது சகோதர முஸ்லிம்களின் அடிப்படையான உரிமையும் கேட்கவேண்டிய நேரத்திலே தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பும் கடமையுமாகும். 

இந்தவேளையிலாவது நாம் இதைப்பற்றி பேசாமல் விடுவது எமது மண்ணுக்கும் மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் இழைக்கின்ற பெரும் துரோகமாகும் என்பதை குறிப்பாக, எல்லாவற்றையும் விடபுத்திஜீவிகள் உணாந்து செயற்படவேண்டிய அவசரத் தேவையுள்ளது.

மு.காங்கிரசின் அடிப்படை:

சமுதாயத்தில் அநீதிகள் களையப்படவேண்டும், நீதி நியாயங்களும் சமத்துவமும் பேணப்படல் வேண்டு மென்றுதான் பேரினக் கட்சிகளையெல்லாம் ஓரங்கட்டி மறைந்த பெருந்தலைவர் எமக்கென சி.ல.மு.காங்கிரசெனும் இச்சமுதாய இயக்கத்தை குர்ஆன்,ஹதீஸ் எனும் புனித அடிப்படைகளைக்கொண்டு பலதியாகங்களின் மத்தியில் பெருவிருட்சமாக வளரச்செய்து எம்மிடம் ஒப்படைத்தார். 

ஆனால் அவரின்பின்பு நடந்தேறியவைகளை பட்டியல்போட்டு அக்குவேறு ஆணி வேராக புட்டுவைப்பது தேர்தலை எதிர்நோக்கும் இத்தருணத்தில் எமது சமுதாய இயக்கத்தை மலினப்படுத்தும் ஒருகைங்கரியமாக மாறிவிடக்கூடாது என்ற உயர்நோக்கத்தில் எமது பேனா தயங்குகின்றது. 

ஆனால் இனியாவது நடப்பவைகள் அநியாயங்களாக இருக்கக்கூடாது, அது நடந்த அக்கிரமங்கள் முரண்பாடுகளை சீர்படுத்துவனவாக அமையவேண்டும் என்ற தார்மீகக் கோட்பாட்டில் எமது பேனா தொடர்கின்றது.

எமது பொத்துவில் தொகுதியிலே பொத்துவில், அக்கரைப்பற்று நிந்தவூர் போன்ற கிராமங்கள் முஸ்லிம் காங்கிரஸ்மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொண்ட சகோதர கிராமங்கள். 

எமது கட்சியினால் அக்கரைப்பற்றுக்கு வழங்கப்பட்ட பட்டியல் பிரதிதித்துவ மூலம்தான் அதாவுல்லா தன்னை ஆளாக்கி, ஊரரசியல் செய்து தனிக்கட்சியமைத்து சமுதாயத்திற்கு எதிரான முரண்பாட்டு அரசியல்மூலம் அக்கரைப்பற்றை வளப்படுத்த முடிந்தது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததை,பாய்வதை இன்றும் அவர் நிருபணமாக்கிக் கொண்டிருக்கின்றார். அல்.ஹம்துலில்லாஹ்.

அட்டாளை அரசியல்:

நிந்தவூர், அட்டாளைச்சேனையோடு நீண்ட அரசியல் வரலாறு கொண்ட ஊர். நிந்தவூர் தொகுதியாக இருந்தபோது மர்ஹூம் முஸ்தபாவை அக்கரைப்பற்று அப்துல் மஜீட்டை நீண்டகாலமாக எமது எம்.பி யாக்கி நாம் அழகு பார்த்தோம். ஆனால் 1977ம் ஆண்டு டாக்டர்.ஜலால்தீன் அட்டாளைச்சேனைப் பிரதேச ஆPயாகி அவரது சேவையைத் தொடரவிடாமல் அவரின் குடும்ப சர்ச்சையை வைத்து சதிவலை பின்னப்பட்டது.

அதன் பிண்ணணியில் மறைமுகமாக செயற்பட்டவர்கள்தான் சி.ல.மு.காங்கிரஸ் அரசியலிலும் அந்த வாய்ப்புகளை காலாகாலம் தடுத்து 25,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இப்பிரதேசத்தை வாக்கு வேட்டையாடும் பகுதியாக மாற்றி குளிர்காய்ந்து வருகின்றனர். 

டாக்டர்.ஜலால்தீனின் சதிவiலையினை உருவாக்குவதில் தனக்கே உரித்தான பின்னணிப் பாத்திரத்தில் இயங்கி பின்பு ஜலால்தீன் போட்ட அதே பாவங்காய் ரோட்டில் அவருக்கு கொடும்பாவி கட்டி எரித்து தன்னை ஊருக்கு இனங்காட்டிக்கொண்ட 'பச்சோந்தி மாஸ்டர்' அவர். இலேசிலே தேர்தல் மேடையில் பேசமாட்டார். 

ஆனால் பின்னணியிலேதான் 'அஜன்டா'சதிவேலைகள். ஆனால் அடிபுடி சண்டைக்கு அகப்படாமல் அதிகாரம் வந்ததும் அனுபவிப்பதிலும் கொந்தராத்து செய்வதிலும் சாணக்கியமானவர்.

சி.ல.மு.காங்கிரசிலும் அடிநாதம் என செயலாளர் நாயகத்தினால் பெயரெடுத்து உச்சபீடத்திலும் நாயகத்தின் சிபார்சில் இடம்பெற்றவர். இரட்டைத் தலைமைத்துவம் என 2000மாம் ஆண்டில் வந்தபோது தலைவர் ஹக்கீம் சேரை எதிர்த்து அம்மாவோடு பதவிக்காக அணிசேர்ந்து இன்றும் பஜ்ருதீனின் பதவியைப்பறித்து நாயகத்தின் பதவியில் அழகு பார்ப்பவர். பெயரை எழுதுவதற்கு பேனா கூசுகின்றது. 

ஆயினும் விளங்கும்தானே?... 
சில.மு.காங்கிரசினால் அபூசாலிக்கும், மசூருக்கும், BA க்கும் கிடைக்கவிருந்த MP பதவிகளுக்கு ஆப்புவைத்த அட்டாளையின் 'அடிநாகம்' இவர்.

செயலாளர் நாயகம் அட்டாளைச்சேனை அரசியலின் 'றிமோட்'டாக மாஷ்டரை நினைத்திருப்பதுதான் பரிதாபமானது. 

இந்த மாஷ்டரைப் பயன்படுத்தி இத்தேர்தலில் தலைவரினால் அட்டாளைச்சேனைக்கு இம்முறை உறுதிப்படுத்தப் பட்டிருக்கும் தேசியப் பட்டியலுக்கும் ஆப்படிக்க ஆயத்தங்கள் நடப்பதாக அறியக்கிடக்கின்றது. 'செயலாளர் நாயகம்' கட்சியின் பொறுப்புவாய்ந்த பதவியை வகிப்பவர். 

எல்லாவிடயங்களிலும் நடுநிலையாகவும், முன்னுதாரணமாக விளங்கவேண்டியவர். அந்த லேபலில் இருமுறை பட்டியல் ஆpயையும் அமைச்சையும் வரப்பிரசாதங்களையும் சேர்த்து அனுபவித்தவர். 2010லும் அதற்கு முன்பும் அட்டாளைக்கு பட்டியில் Mp தலைவரினால் வழங்கவிருந்தபோது தலைவரைச் சூழ்நிலைக் கைதியாக்கி அடம்பிடித்து, மக்களால் தெரியப்பட்ட Mp ஒருவர் ஏற்கனவே நிந்தவூருக்கு இருந்தபோதிலும் பறித்துக்கொண்டவர். பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்த அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, காத்தான்குடி போன்ற பெரிய ஊர்களிலொன்றொக்கு அப்பதவியை விட்டுக் கொடுத்திருக்கலாம். அதற்கு மனச்சாட்சியில்லை.

மறுபுறத்தில் கட்சியும் தலைவரும் இரண்டு ஆP க்களை நிந்தவூருக்கு 10வருடங்களாக வழங்கியிருந்த போதிலும் அதனால் கட்சிக்கும் சமுதாயத்திற்கு மேற்பட்ட நன்மைகளென்ன? 20,000க்கு மேற்பட்ட வாக்குகளை நிந்தவூர் கொண்டிருந்தபோதிலும் ஒவ்வொருமுறையும் கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் எத்தனை? தேசிய காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் 7ஃ 8,000 வாக்குகளுக்கு குறையாமல் அங்குபெற்று வருவதன் மர்மம் என்ன? 2012 மாகாண சபைத்தேர்தலில் மு.காங்கிரசில் ஒருவேட்பாளரை மட்டும் நிறுத்தியபோதிலும் இரண்டு Mp க்களிருந்தும் அவரை வெல்லவைக்க முடியாமல் போய்விட்டது. 

அவர் நாயகத்தின் சொந்த சகோதரர் என்பது பாரதூரமானது. இதுதான் எமது கட்சியின் நீதியும் சமன்பாடுமா.?......
அட்டாளைச்சேனை,பாலமுனை,ஒலுவில்,தீகவாப்பி ஆகிய ஊர்களை உள்ளடக்கி 25,000க்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேசம் சி.ல.மு.காங்கிரசின் அரசியலில் மறைந்த தலைவரினால் புனிதபூமியாக மதிக்கப்பட்டு 'தேசிய மீலாத்விழா' உத்தியோகபூர்வமாக அரங்கேற்றப்பட்ட பிரதேசம். மறைந்த தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட இருபெரும் திட்ட அபிவிருத்திகளான தெ.கி.பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம் என்பவற்றுக்கு களமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மண். 

இப்பிரதேச மண்ணும் அப்பாவி ஏழைமக்களும் சி.ல.மு.காங்கிரஸ் அரசியல் வளர்ச்சியிலே கொண்டிருந்த வெளிப்பாடான தீராதஆசையும் சமூக ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் மறைந்த பெருந்தலைவரின் தீர்க்க முடிவுகளுக்கான கருவூலமாகும். 

இவ்வரசியல் போராட்ட களத்திலே 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிடியில் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த '12 சஹீத்'களின் தியாகம் அர்ப்பணிப்பின் இமயமாய் மேலோங்கி நிற்கின்றது. 

ஆயினும் கிழக்கிலே பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரையிலுமுள்ள எல்லாபெரிய ஊர்களுக்கும் கட்சியினால் வழங்கப்பட்டுவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்மண்ணுக்கு மட்டும் வழங்குவதிலே கடந்த 15வருடகாலமாக காட்டப்பட்டு வரும் முரண்பாடான போக்கு புரிய முடியாததாயுள்ளது. 

சில ஊர்கள் இவ்விரண்டு பிரதிநிதிகளைப் பெற்றிருந்த வேளையிலும் இப்பிரதேச மக்கள் இழப்புகளின் மத்தியிலும் இன்னும் பொறுமையுடன் இக்கட்சிக்கான பங்களிப்பிலே காட்டிவரும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இம்மக்களின் நன்குவிருத்தியடைந்த பரந்த உளப்பாங்கினை வெளிக்காட்டி நிற்கின்றது. 

சவால்கள் : 

விவசாயத்தையும், மீன்பிடியையும் அடிப்படைப் பொருளாதாரமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் கடந்தகாலங்களில் அதாவுல்லாவின்,உதுமானின் ஊர்தழுவிய பம்மாத்து குறுகிய அபிவிருத்திகளினால் பாதிப்பிற்கும் பழிவாங்கல்களுக்கும் உட்பட்டனர். 

இப்பிரதேசத்தின் சி.ல.மு.காங்கிரசின் முதன்மைப் போராளிகள் புனையப்பட்ட பொலிஸ் வழக்குகளினால் சிறைகளிலும் பொலிசிலும் 10அடைக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டனர். மேற்கிலே ஆலம்குளம், நுறைச்சோலை, தீகவாப்பி போன்ற இடங்களில் காணிப் பிரச்சினைகளுக்கும், கிழக்கிலே பூரண இயக்கமற்ற மீன்பிடி வாணிபத்துறைமுகம் என்பவற்றினால் அடிப்படை வாழ்வாதாரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பரிதாபகரமான நிலைமைகளிலும் தமது வாழ்வுகளை இம்மக்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். 

ஆகவே கட்சி அரசியலினால் தனிப்பட்ட முறையிலும் சமுதாயஅடிப்படையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மக்களோடு அடிமட்டத்திலிருந்து குறைகள், தேவைகளை மதிப்பீடுசெய்து தன்னலமற்ற சேவையாற்றக்கூடிய ஆற்றல்மிக்க பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இம்முறையிலாவது முன்னுரிமைப்படுத்தி வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை இங்கு மேலோங்கி நிற்கின்றது. 

ஆயினும் கட்சியும் தலைமைத்துவமும்; தமது அரசியல் சதுரங்கவிளையாட்டில் இன்னும் இப்பிரதேச மக்களை பலியாக்க நினைப்பது மறுமையில் இறைவனுக்கு பதில் கூறமுடியாத கேள்வியாக எழுந்து நிற்கும்.

தலைமைத்துவ அமானிதம்: 
இம்முறை அத்தனை தடைகளையும் தாண்டி சரியான தீர்மானத்தை எடுப்பதன் மூலம் ஆணித்தரமான தலைமைத்துவப் பண்பை தேசியத்தலைவர் வெளிக்காட்டுவார் என்ற நம்பிக்கையோடும் பிரார்த்தனைகளோடும் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தலைமைத்துவம் கூடியவரையில் முரண்பாடுகளைக் களைந்து நீதியையும், சமத்துவங்களையும் பிரதேசங்களுக்கடையே நிலைநாட்டுவதில் கடந்த 2வருடகாலமாக முனைப்போடு செயற்பட்டு வருவதனை இங்கு குறிப்பிடவேண்டும். கல்முனை மாநகரசபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை,இறக்காமம் பிரதேச சபை, இறுதியாக முதலமைச்சர் விவகாரம் என்பவற்றில் தனக்கு சரியெனப்பட்டதை சாதிப்பதில் தீர்க்கமாக செயற்டிட்டிருக்கின்றது. 

ஆகவே இம்முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்குவதன்மூலம் தலைமைத்துவம் அரசியல் வரலாறு படைத்து சில.மு.காங்கிரசின் தியாகப்பூமியான இம்மண்ணினதும் நீண்டகால குறைபாட்டை நிவர்த்திக்க வேண்டும்.

சி.ல.மு.காங்கிரஸ் பெரும்பாலும் ஜ.தே.கட்சியுடன் சேர்ந்து நாடுமுழுவதிலும் களமிறங்குவதற்கான பேச்சுக்கள்,முயற்சிகளிலே முனைப்பாக ஈடுபட்டுவருகின்றது. சமுதாயத்திற்கான நற்பணிகள் உரிமைகளுக்கான இயக்கமாகவுள்ள இக்கட்சியும் நல்லாட்சிக்காக கற்றறிந்த ஆற்றல், ஒழுக்க பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்ற அடிப்படைக்கருத்துக்கு உடன்பட்டே செயற்படவேண்டிய தேவையுள்ளது.

கட்சியின் தலைமைத்துவமும் உயர்மட்டமும் இம்முறை ஆகஸ்ட்டில் இடம்பெறும் தேர்தலோடு அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்கிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் செயற்படுவதாக உள்ளக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த நல்லாட்சியில் இதற்கு பொருத்தமானவர்? யாருக்கு இந்த சமுதாய அமானிதத்தை வழங்கவேண்டுமென்பதில் நீதி நியாயமாக இறைவனுக்குப் பதில்கூறக்கூடிய முறையில் தலைமைத்துவம் முடிவினை எடுக்குமென்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. 

நன்கு படித்து பல்துறைசார் அனுபவங்களோடு அர்ப்பணிப்புகளோடு கடந்தகால சவால்களுக்கு முகங்கொடுத்து அத்தனையுமிழந்து இப்பணியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனையின் முதற்பட்டதாரி பழீல் BA அவர்கள் நல்லாட்சி அரசியலுக்கு இலக்கணம் வகுக்கக்கூடியவர் என்றரீதியில் புத்திஜீவிகளும் உலமாக்களும் சமூக முதன்மையாளர்களும் அவரது பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். இவர்களின் நல்லெண்ணம் நிறைவேற இப்புனித நாட்களில் இறைபிரார்த்தனைகளில் ஈடுபடுவோமாக. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -