மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் வளர்ச்சி நிதிக்காக சிநேக பூர்வ உதைபந்தாட்டப் போட்டி




பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் வளர்ச்;சி நிதிக்காக “ஷம்ஸ் கல்வி அபிவிருத்திச் சங்கம்” ஏற்பாடு செய்த சிநேகப+ர்வ உதைபந்தாட்டப் போட்டி இன்று (24-07-2015)மாலை மசூர்மௌலான விளையாடுத் திடலில் நடைபெற்றது.

இப்போட்டியில் கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழக அணியும,; மருதமுனை விளையாட்டுக் கழகங்களின் தெரிவு அணியும் மோதின மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோள்களைப் போட்டு சம நிலையை அடைந்தது.

ஷம்ஸ் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ரி.எல்.அப்துல் மனாப் தலைமையில் நடைபெற்ற இந்த உதைபந்தாட்டப் போட்டிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

விஷேட அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.நுபைல் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதம பிரதிச் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிதிகளாக ஒய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.ஏ.றாசிக்.கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி மற்றம் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். இரு அணிகளுக்கும் அதிதிகள் ஞாபக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -