மனிதர்கள் மனிதப்புனிதர்களாக வாழ மதஸ்தலங்கள் கட்டாயமாக நிர்மாணிக்கப்படல் வேண்டும்- சஜித்

அஸ்ரப் ஏ சமத்-

ந்த நாட்டில் பள்ளிவாசல்கள், ஹிந்து கோயில்கள், பௌத்த பண்சலைகள், கிரிஸ்த்துவ ஆலயங்கள் நிறைய நிர்மாணிக்கப்படல் வேண்டும். அதுவே தற்கால மாணிட சமுகத்திற்கு ஒரு ஆத்மிக வாழ்க்கைக்கும் மணிதர்கள் தமது வாழ்க்கை திரம்பட சீரான வாழ்க்கைக்கும் கொண்டு செல்வதற்கு மதஸ்தலங்கள் கட்டாயமாக நிர்மாணிக்கப்படல் வேண்டும். 

என வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஹம்பாந்தோட்டை ஜ.தே.கட்சி வேட்பாளருமான சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையில் வாழும் முஸ்லீம்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனது 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எனக்கு கிடைத்த பெரிய பரிசு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுப் பதவியாகும்.
அந்த பிறந்த நாள் பரிசை அடிப்படையாகக் கொண்டு நான் இலங்கை பூராகவும் இருக்கின்ற வறிய மக்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காகவும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல் வதற்காகவும் பல்வேறு செயல் திட்டங்களை முன்வைத்துள்ளேன். 

பதினைந்து ஆயிரம் (15,000) கிராமங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் எனும் செயற்பாட்டின் ஊடாக ஒவ்வொறு கிராமத்திலும் ஓர் அபிவிருத்தி திட்டத்திற்காக பத்து இலட்சம் ரூபா (10,00000) வழங்கி வைக்கப்பட்டது. அதே போல ; இஸ்லாமிய மதவழிப்பாட்டுத் தளங்களை வளப்படுத்துவதற்காக பணரீதியாகவும் பொருள்ரீதியாகவும் பல உதவி திட்டங்களை அமுல்படுத்தியுள்ளேன். ஹம்பாந்தோட்டை மக்களுக்காகவும் இஸ்லாமிய சமூகத்திற்காகவும் அனைத்து இலங்கை மக்களுக்காகவும் அவர்களது கிராமங்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன். 

எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் எனக்குப் பெற்றுத்தரும் பலத்தினை அடிப்படையாகவும் ஆசிர்வாதமாகவும் கொண்டு உங்களை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு நான் என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என அமைச்சர் சஜி;த் பிரேமதாச அங்கு உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -