அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கட்சியில் இணைந்த காரணம் என்ன விளக்குகிறார்- சித்தீக் நதீர்

பி.எம்.எம்.ஏ.காதர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் ஆற்றலும். ஆழுமையும், நேர்மையுமே அவரது கட்சியில் என்னை இணைய வைத்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் மருதமுனையைச் சேர்ந்த சித்தீக் நதீர் தெரிவித்தார்.

மருதமுனையில் செவ்வாய்க்கிழமை(21-07-2015)ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே சித்தீக் நதீர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :- அம்பாறை மாவட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தாலும் மக்கள் இப்போது விழிப்படைந்து புதியவர்களையும் புதிய மாற்றங்களையும் எதிர்பார்க்கின்றார்கள் ஆகையால் இம்முறை இறைவன் நாடினால் அம்பாறை மாவட்டத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; இரண்டு ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

அம்பாறை மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்கள் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீpர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் திர்வைக் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -