க.கிஷாந்தன்-
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் வில்பிரட்புர பகுதியில் கேம்ப்வெளி பிரிவில் 22.07.2015இன்று அதிகாலையில் ஏற்பட்ட மண்சரிவினால் மண்மேடு இடிந்து விழுந்ததில் ஒருவீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதனால் வீட்டினுள் இருந்த பெருமதிமிக்க சொத்துகள் மண்மேடினால் சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வீட்டிலிருந்த இருவர் சத்தம் ஒன்று கேட்ட பின்னர் பயத்தில் வெளியே சென்றதாகவும் அதன் பின்னரே பாரிய மண்சரிவு இடிந்து விழுந்ததாகவும் குறித்த இருவரும் தெரிவிக்கின்றனர். எனினும் தெய்வாதீனமாக இவர்கள் உயிரி தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



