மு.காவின் அம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியல் அட்டாளைச்சேனைக்கே நஸீர் குழுவிடம் தலைவர்

அபு அலா -

ம்பாறை மாவட்டத்துக்கான தேசியப் பட்டியலை இம்முறை அ்டாளைச்சேனைக்கு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை மாலை (18) நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் தின நிகழ்வு முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும், இராஜாங்க சுகாதார அமைச்சருமானா எம்.ரீ.ஹசன் அலியின் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திகழும் அட்டாளைச்சேனை பிரதேசம் பல வருடங்களாக இழந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இம்முறை அட்டாசை்சேனைக்கு வழங்குவதற்கு கட்சி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை ஊரின் முக்கியஸ்தர்களுடன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் தலைவர் எஸ்.எச்.அனீஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான யூ.எம்.வாஹிட்,எஸ்.எல்.எம்.பழீல் (BA), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுவினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -