பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமது குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது உரையாற்றிய அவர், ராஜபக்சவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எதிராக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
