தமக்கு எதிராக முகநூல் ஊடாக பல்வேறு சேறுபூசும் சுவரொட்டிகள் பரப்பப்படுகின்ற போதும் தமது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இது மிகவும் மலினமான முயற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது புகைப்படங்களுடன் தமது மருமகள்மாரின் படங்களை இணைத்து இந்த சுவரொட்டிகள் பரப்பப்பட்டுள்ளன என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தம்மைப் பற்றி அவதூறு செய்கின்றவர்கள், தமது தாய்மாரையும் சகோதரிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வீரவன்ச கோரியுள்ளார்.
