யு.எல்.எம். றியாஸ்,சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் திறமைகளை மேம்படுத்தி தேசிய ரீதியில் பிரகாசிக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைய விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின்சொந்த நிதியில் இருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒருங்கமைப்பின்ஏற்பாட்டில் இவ் வைபவம் இடம்பெற்றது.
ஒருங்கமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்ராஹீம் தலைமையில் நிந்தவூர் அல் - மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு உபகரணத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.
இவ் வைபவத்தில் தேசிய ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள்
வென்ற நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களுக்கு நினவுச்சின்னம்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் உலமாக்கள் , விளையாட்டு துறை சார் உத்தியோகத்தர்கள்




