நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் குறைந்தது 30 வீதமான பெண்களுக்கு வேட்புமனு வழங்குமாறு மகளிர் விவகார அமைச்சு அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பட்டியலில் மூன்றில் ஒன்றை பெண்களுக்காக ஒதுக்குமாறு மகளிர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் குழுவின் தலைவி சுவர்ணா சுமணசேகர அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்காற்றக் கூடிய திறமையுள்ள பெண்கள் இம்முறை புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத்தில் 5.8 வீதமான பெண் உறுப்பினர்களே காணப்பட்டதாகவும் இது தெற்காசியாவிலேயே குறைந்த அளவு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் 153 நாடுகளில்இலங்கை 140 வது இடத்தில் காணப்படுகின்றது.