மஹிந்தவுடன் இனவாதிகளும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டனர் -முஜிபுர் ரஹ்மான்-

நாட்டில் பேரி­ன­வா­தி­க­ளுக்கு கள­ம­மைத்­துக்­கொ­டுத்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணைந்து இன­வாத சக்­தி­களும் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

இதனால் பேரி­ன­வா­திகள் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­து­விட்­டனர் என மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசி­யக்­கட்சி பிர­தான அமைப்­பா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


மரு­தா­னையில் இடம்­பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.


ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­தினோம். இந்த பெரும்­பான்­மை­யான மக்கள் ஏற்­றுக்­கொண்ட மாற்­றத்தை சீர்­கு­லைக்க தோற்­றுப்­போன மஹிந்த அணி­யினர் மீண்டும் அர­சிலில் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றனர்


நாட்டில் எல்­லோ­ருக்கும் அர­சியல் செய்யும் உரிமை இருக்­கின்­றது. மஹிந்த தரா­ள­மாக அர­சியல் செய்­யலாம்.


ஆனால் அவர் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்றார். இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.


கடந்த சில மாதங்­க­ளாக பேரி­ன­வா­தி­களின் கொற்­றங்கள் அடங்­கி­யி­ருந்­தன. மஹிந்­தவின் மீள் வருகை பேரி­ன­வா­தி­க­ளுக்கு தெம்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.


அவர்கள் தைரி­ய­மாக முஸ்­லி­ம­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை மீண்டும் ஆரம்­பித்­துள்­ளனர். மஹிந்­தவின் வரு­கை­யோரு பேரி­ன­வா­தத்தின் வரு­கையும் அமைந்­துள்­ளது. இது நாட்டின் அமை­திக்கு பெரும் ஆபத்­தாகும்.


நாட்டில் இடம்­பெற்ற 30 வரு­ட­கால யுத்­தத்­தினால் தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் பெரு­ம­ளவில் பாதிக்­கப்ட்­டுள்­ளனர். பல உயிர்­களை நாம் இழந்­தி­ருக்­கிறோம்.


நாடு பல வரு­டங்கள் பின்­னோக்கி சென்­று­விட்­டது. இந்­நி­லையில் மற்­று­மொரு போராட்­டத்­திற்கு மஹிந்த வழிவகுக்கின்றார்.


இதனை தடுக்க வேண்டுமானா பேரினவாத சக்திகளுக்கு இடமளித்து ஊக்குவிக்கும் மஹிந்த அணியினரை தோற்கடிக்கவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -