இன்று ஒரு சில ஊடகங்கள் வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சார கூட்டம் பிசு பிசித்து போனது என்று பொய்யான செய்தியை சொல்லி மக்களை திசை திருப்புகின்ற ஒரு கேவலமான வங்குரோத்து தனமான செயலை பிரசுரித்து இருக்கிறது.
ஆனால் அங்கு சுமார் 2000 க்கும் அதிகமான மக்கள் வந்து இருந்தனர் என அங்கிருந்து எமக்கு வட்டாரங்களிலிருந்து எமக்கு அறியக் கிடைத்தது. எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத ஒரு சில கட்சிகள் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை தங்களுக்கு சார்பான ஊடகங்களை பயன்படுத்தி இவ்வாறான செயலை செய்ய சொல்லி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்புகின்ற வேலைய செய்கின்றனர் .
ஆகவே அன்பார்ந்த மக்களே நீங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் .இன்றைய காலகட்டத்தில் ஒரு நடுநிலையான சிந்தனை உள்ள ஊடகம் என்று சொல்வதற்கு இல்லை . ஊடகவியலாளர்களும் இல்லை இன்று இருக்கின்ற தமிழ் ஊடகங்கள் ஒரு சில கட்சிகளுக்கு சோரம் போகின்ற நிலையை பார்க்கின்ற பொழுது மிகவும் மனம் கவலையா இருக்கின்றது .
ஊடகங்களுக்கு என்று இருக்கின்ற தார்மிக பொறுப்பு ,வரையறை , ஊடக சுதந்திரம் போன்றவற்றை மறந்து ஒரு சுயநலவாத போக்கோடு செயற்படுகின்ற ஊடகங்களாகதான் இருக்கின்றது.
ஏன் இவ்வாறு சில ஊடகங்கள் இருக்கின்றது என்று தெரியாமல் இருக்கின்றது. இன்று ஒரு சில கட்சிகள் தங்களுக்கு சார்பாக எழுதுவதற்கு ஊடகங்களை விலை கொடுத்து வாங்குகின்ற காலமாக இன்றைய காலம் இருக்கின்றது.
ஆகவே மக்களே நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும் ஒரு சிலர் தங்களுடைய இழந்த செல்வாக்கை நிவர்த்தி செய்ய இவ்வாறு ஒரு சில ஊடகங்களை விலை கொடுத்து வாங்கி தங்களுக்கு சார்பாக எழுத வேண்டும் என்று உத்தரவும் வழங்கி இருக்கின்றனர். ஆகவே மக்களாகிய நீங்களே சிந்தித்துப் பாருங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக இன்று ஊடகங்களில் வந்த தகவல் பொய்யான தகவல் என்று வன்னி மக்களில் இருந்து ஒருவர் எங்களுக்கு தகவல் வழங்கினார் ஆகவே மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து முடிவு எடுக்குமாறு கேட்டு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...