அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியுடன்..!

திர்வரும் பொதுத் தேர்தலில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். 

இது தொடர்பில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவது குறித்த தீர்மானித்திற்கு அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்படி இவர்கள் கூட்டமைப்பில் இருந்து விலகி முன்னணி ஒன்றின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

எதுஎவ்வாறு இருப்பினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் முற்போக்குக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவது பற்றிய இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு வேட்புமனு வழங்கவில்லையாயின் கண்டி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -