ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சுசில் பிரேம ஜயந்த தனது இல்லத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும் இது குறித்து சந்தேகம் காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மறுப்பு தெரிவித்த போதிலும் கடந்த வியாழக்கிழமை இரவு சுசில் தனது இல்லத்தில் இரகசிய கூட்டமொன்றை நடத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் சுசிலின் இல்லத்திலிருந்து வெளியேறும் தொலைக்காட்சி வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுசில் பிரேமஜயந்த அண்மைய நாட்களில் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இரகசிய சந்திப்பு நடத்தியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
