அகில இலங்கை ரீதியில் அன்று முதல் இன்று வரை அனைவராலும் பேசப்படும் கட்சி ஸ்ரீ.மு.கா -கட்டுரை

எம்.பைரூஸ் வாழைச்சேனை-

கில இலங்கை ரீதியில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களை தனித்துவப்படுத்திக் காட்டி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே என்று சொல்லிக் கொள்வதில் மிகையாகாது.



சுமார் கடந்த முப்பது வருட காலமாக முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வரும் இந்த கட்சி ஆனது அது உருவாகி குறுகிய காலத்திலயே அதன் பயனையும் வளர்ச்சியையும் முஸ்லிம்கள் அடைந்தார்கள் எனலாம் அதன் ஸ்தாபகர் மறைந்ந தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் பதினெட்டு பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்று அதிலும் குறிப்பாக பெருபான்மை இனத்தவரிலிந்து ஒரு ஆசனத்தையும் தன்வசப்படுத்தி பெற்று ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் அன்று திகழ்ந்து இருக்கின்றது என்றால் அதன் வளர்ச்சி குறுகிய காலத்திலயே எந்தளவுக்கு இருந்தது என்று நீங்களே தீர்மானித்து கொள்ளலாம்

ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானாது இன மத மொழிக்கு அப்பாட்பட்டு சேவை செய்ததன் ஒரே காரணமாகவே பெரும் பான்மை சமூகத்திலும் அது மா பெரும் வரவேற்பை பெற்றது எனலாம் இது உருவாக்கப்பட்ட காலமானது விடு தலைப் புலிகள் இயக்கத்தால் நாட்டில் பயங்கர வாதம் தலை தூக்கி காலம்
எங்கு பார்த்தாலும ஒரே அச்ச நிலை யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை என்றாலும் அல்லாஹ்வின் உதவியுடனும் தலைவர் அஷ்ரப் அவர்களின் விவேகத்தினாலும் துணிந்து நின்று கட்சியை வழி நடத்திச் சென்றார் ஆகவேதான் கட்சி மெச்சத்தக்க வளர்ச்சியை குறுகிய காலத்திலேயே எட்டியது.

உலக வரலாற்றில் ஐக்கிய நாட்டுச் சபையில் அதி கூடிய நேரம் எடுத்து ஆங்கிலத்தில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனா எந்தளவு கல்வி ஞானம் மிக்கவரோ அவரை விட எம் மா பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களும் கல்வி ஞானமிக்கவரே என்பதை நிரூபித்துக் காட்டினார் இலங்கை பாராளு மன்றத்தி்ல் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றி சாதனை படைத்தார் ஆகவே இதிலிருந்து எமக்கு புரிவது கட்சியின் வளர்ச்சிக்கு அவரின் அளப் பெரும் பங்களிப்பு இருக்கின்றது என அறியலாம்.

அதன் பிற்பாடு தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பின்தான் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது தலைமைத்துவத்துக்கு ஆசைப்பட்டு சிலர் தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சியில் இணைந்து கொண்டார்கள் ஆனால் அவர்களை இனைத்துக் கொண்டது எந்த அளவு தவறு என்று குறுகிய காலத்திலயே இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் புரிந்து கொண்டிருப்பார் ஏனெனில் இவர்களும் கட்சியை வீழ்ச்சி பெறச் செய்ய பல் வேறு முயற்சிள் செய்து அதி்ல் குறுகிய பயனையும் பெற்றார்கள்.

காங்கிரஸில் வேற்பாளர் மனு பிச்சை எடுத்து பாராளு மன்றம் சென்ற அதாவுல்லாஹ் றிஷாத் போன்றோர்கள் பாராளு மன்றம் சென்று குறுகிய காலத்திலயே கட்சியையும் தலைமைத்துவத்தையும் குறை கூறி பணத்துக்காவும் பதவிக்காவும் சோரம் போய் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை தலைமைத்துவத்துக்கு எதிராக கட்டவிழ்த்து மானபங்க படுத்தி கட்சியை விட்டு விலகிச் சென்றார்கள் இதுவும் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகி விட்டது.

பின்னர் றிஷாத் பதியுத்தீன் அகில மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியையும் அதாவுல்லாஹ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியையும் உருவாக்கிக் கொண்டு காங்கிரஸுக்கே சவாலாக வர ஆரம்பித்தார்கள் மக்கள் காங்கிரஸ் மன்னார் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே தேசிய காங்கிரஸ் அக்கறைப்பற்று மக்களுக்களுக்காக உருவாக்கப்பட்டதே ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறு அல்ல அது ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் மர்ஹூம் பெருந் தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்டது ஆகவே இக்கட்சியிலிருந்து றிஷாத் அதாவுல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் அமீர் அலி ஜெமில் நஜீப் ஏ மஜீத் போன்ற யார் கட்சியை விட்டு விலகிச் சென்றாலும் நாம் ஒற்றுமையாக கட்சியை தலைமைத்துவத்தோடு ஒன்று சேர்ந்து வழி நடத்திச் செல்ல வேண்டும் அதுவே கட்சியின் வீழ்ச்சிக்கு தடையாக அமையும்.

இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் பொடு போக்கினாலும் சில முக்கிய காரணங்களாலும் ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து சுமார் பத்து வருட காலமாக எதிர் கட்சியிலிருந்து கொண்டு கட்சியை வழி நடத்திச் சென்றமையினால் சிறிது கட்சியின் வீழ்ச்சிக்கு அதுவும் காரணமாகி விட்டது.

அன்று இந்த கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் எல்லாம் சொந்த ஊருக்காகவே கட்சியை உருவாக்கி அவர்களின் ஊர்களுக்கும் அளவுக்கதிகமான சேவைகளையும் செய்தார்கள் ஏனெனி்ல் அவர்களின் வாக்குகளும் சொந்த மண்ணில் மாத்திரமே இருக்கின்றது ஆகவே சேவை செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டு தனது பதவியையையும் தக்க வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறார்கள்.

கிழக்கு மாகண முதலமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டும் என்று அன்றைய தலைவர் அஷ்ரப்புக்கே மிகப் பெரும் ஆசை இருந்தது அதனை இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமின் தீவிர முயற்சியால் அதனை முஸ்லிம் காங்கிரஸில் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்த சமயம் அதற்க்கும் தடையாக இருந்தவர்கள் எம் கட்சியிலிருந்து பணத்துக்கு சோரம் போன சில துரோகிகளே ஆனால் அதன் மூலம் அவர்களே ஒரு மாகாண சபை உருப்பினரை இழந்து அல்லாஹ்வின் உதவியுடன் முதலமைச்சப் பதவியும் காங்கிரஸுக்கு கிடைக்கப் பெற்று இன்று வரை அதன் மூலம் பெரும் பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே இதிலிருந்து எமக்கு என்ன புலபப்படுகின்றது என்றால் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெரும் பாலான பங்களிப்பு மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் பேச்சுத் திறமையினாலும் வாதத் திறமையினாலும் விவேகத்தினாலுமே கிடைக்கப் பெற்று இருக்கின்றது என்றும் ஆனால் அதன் வீழ்ச்சி இன்றைய தலைவரின் சில அசம்பாவித போக்கினாலும் காங்கிரஸில் முகவரி பெற்று பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போன சில முஸ்லிம் தலைவர்களாலேயே என்று சொல்லிக் கொள்வதிலும் மிகையாகாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -