ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் -அதாஉல்லா


தேசிய காங்கிரசின் மூன்று பேரும் பாராளுமன்றம் செல்வது உறுதி உறுதி பொத்துவில் பொது அமைப்புக்களுடன் நடை பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய போது ...... முன்னாள் அமைச்சர் அதாஉல்லா .....

இம்முறை பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சற்று வித்தியாசமான வியுகத்தை வகுத்துள்ளது . கடந்த கால தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் மூன்று தொகுதிகளுக்குமே மூன்று பேரை நிறுத்தியது அதில் வெற்றியும் கண்டது .

இம்முறை தேசிய காங்கிரஸ் எவராலும் திரும்பிப்பார்க்காத யாரும் எந்த கட்ச்சியும் அரசியல் அதிகாரம் வழங்க முன்வராத இரண்டு ஊர்களை தேர்ந்தெடுத்திருக்கிறது .பொத்துவில் மற்றும் இறக்காமம் இவ்வளவு காலமும் இந்த இந்த இரண்டு ஊர் மக்களினது வாக்குகளை சுவீகரித்தர்கள் தவிர இவ்விரண்டு ஊர்கலுக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தை யாரும் வழங்க வில்லை .இவ்விரு ஊர் மக்களும் மனச்சாட் சியில் கைகளை வைத்து சொல்லுங்கள் யாரும் உங்களது ஊர்களை கவனித்து அரசியல் பிரதிநித்துவம் வழங்கினார்களா ?

எனவே இறக்காமம் மற்றும் பொத்துவில் வாழ் என் உடன் பிறப்புகள் சற்று சிந்தியுங்கள் .நீங்கள் தொடர்ந்தும் கருவேப்பிலையாகவே பயன் படுத்தப்பட்டுல்லிர்கள் அந்த நிலை மாற வேண்டும் அதற்காகவே உங்களுக்கு வேர்ப்பாலர்களை கலமிரக்கியுள்ளேன் .தொடர்ந்தும் நீங்கள் அரசியலில் அநாதையாக இருக்க வேண்டாம் . அந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து புது யுகம் படைப்போம் ....தேசிய காங்கிரசுடன் கை கோருங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் .

இன்று தேசிய காங்கிரஸ் புதிய பாதையில் புது யுகம் நோக்கி பயணித்து வருகிறது .தேசிய காங்கிரசுடன் கை கோருங்கள் . எமது வெற்றி பாதையை ஜீரணிக்க முடியாத சிலர் பல பொய் பிரச்சாரங் களில் ஈடுபட்டுள்ளனர் அவைகளை நம்ப வேண்டாம் . எனவும் மேலும் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -