ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்-
யாழ் . முனீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சா யாழ். பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது பொதிகளில் சுற்றப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி யு.கே வூட்லர் , போக்குவரத்து பொறுப்பதிகாரி , பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்களாவர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்றும் தலைமைப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


