கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சுப் பதவி, மாகாண சபை உறுப்பினர் பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்யவுள்ளதாக இம்போட் மிரருக்கு எம்.ஐ. மன்சூர் தெரித்தார்.
அவரிடம் மேலும் இம்போட் மிரர் வினவிய போது,
நான் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பதவியையும், மாகாண சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய்ம்படி தலஒவர் கோரியுள்ளதற்கமைய விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன்.
இதற்கான இராஜினாமா கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் எதிர்வரும் ஒரு சில தினங்களில் ஒப்படைக்கவுள்ளேன் என தெரிவித்தார்.
மன்சூரின் வெற்றிடத்துக்கு சம்மாந்துரையைச் சேர்ந்த மாஹிர் வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்சூரின் வெற்றிடத்துக்கு சம்மாந்துரையைச் சேர்ந்த மாஹிர் வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் சம்மாந்துறை தொகுதிக்கான வேட்பாளராக எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவு செய்யப்பட்டு வேட்புமனுவில் கைச்சாத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.
