ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சுபைர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமாவை அறிவித்தவுடனேயே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டு மட்டு. மாவட்ட வேட்பாளராகவும் களமிறங்குகிறார். திடீரென நடைபெற முடியாததும் திட்டமிட்டே இடம்பெற்றதுமான ஒரு விடயமாகவும் இது விமர்சிக்கப்படலாம்.
“எனது அனுமதி பெறாமல் ஈரானுக்கு ஏன் சென்றாய்?” என்று அமீர் அலி கேட்க “நான் கட்சியின் தலைவரான அமைச்சர் பதியுதீனிடம் கூறி அனுமதி பெற்றே ஈரான் சென்றேன்” என்று சுபைர் கூற ஆரம்பமான இந்த முரண்பாடுகள்… 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்றினை சுபைர் கொழும்பில் வாங்கியுள்ளார் என்று அமீர் அலி கட்சியின் தலைவரான ரிஷாத் பதியுதீனிடம் கூற…, நான் பணத்துக்கு ஆசைப்பட்டிந்தால் ஹாபிஸ் நஸீரிடம் 30 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அவரைக் கிழக்கு மாகாண முதலமைச்சராக்குவதற்கு எனது விருப்பத்தையும் தெரிவித்திருப்பேன் என்று சுபைர் பதிலடி கொடுக்க முற்றிப் போய் வெடித்த இவர்களது முரண்பாடு இன்று அந்தக் கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தி விட்டது.
கட்சிக்காக பாடுபட்டு, கட்சியுடன் தொடர்ந்து இருந்ததன் காரணமாகவே என்னை கிழக்கு மாகாண சபை பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி விட்டார்கள். இவ்வாறு எல்லாம் கட்சிக்காக தியாகம் செய்த எனக்கு எதிராக அமீர் அலி சதி செய்து விட்டார். ஆனால், கட்சித் தலைவர் ரிஷாத் நல்லவர் என்று இன்றும் கூறிக் கொண்டிருக்கும் சுபைர்…
இரவோடிரவாக லத்தீப் என்வரைச் சந்தித்து வேட்பு மனுவில் அமீர் அலி கையொப்பம் பெற்றுக் கொண்டதனை தெரிந்து கொண்ட சுபைர் அன்றிரவே தனது ராஜினா அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு“ என்பது போல் சந்தர்ப்பம் ஒன்று வரும் வரையில் காத்திருந்த ஹிஸ்புல்லாஹ், உடனடியாகவே சுபைரை கவ்விக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் இணைத்து வேட்பு மனுவையும் பெற்றுக் கொடுத்து விட்டார்.
ஆக, மட்டக்ளப்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்தாக இன்று வீழ்த்தப்பட்டுள்ளன. மஹிந்தவின் பந்துகளில் ஹிஸ்புல்லாஹ்வும் ஷிப்லி பாறூக்கும் வீழ்த்தப்பட்டனர். அமீர் அலியின் பந்து வீச்சில் இன்று சுபைர் எல். பி டபிள்யு (L B W)முறையில் ஆட்டம் இழந்துள்ளார்.. (அமீர் அலிதான் தனக்கு சதி செய்தார் என சுபைர் கூறியதன் அடிப்படையில்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த மூன்று விக்கெட்டுகளும் மட்டு. மாவட்டத்தில் மிகப் பெறுமதியானவை. இதில் ஹிஸ்புல்லாஹ்வை தவிர மற்றவர்கள் தேர்தலில் நின்று தோற்றாலும் அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அந்தக் கட்சியின் தேசியல் பட்டியலுக்கு பெரிதும் உதவுக் கூடியவை. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றுதான் நான் கணிக்கிறேன். இவர்களில் ஒருவராவது அல்லது இவர்கள் மூவரினாலுமாவது ஒருவர் எம்.பியாக தெரிவு செய்யப்படும் சாத்தியம் அந்தக் கட்சிக்கு இல்லாமல் போயுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூவரில் அமீர் அலியைத் தவிர மற்றவர்களின் அரசியல் இருப்பு, மக்கள் செல்வாக்கு எந்தளவு உள்ளது என்பதனை என்னால் கூற முடியாது. இவர்கள் மூவரும் போட்டியிட்டு அவர்களில் ஒருவர் எம்.பியாக வர முடியுமா அல்லது இவர்கள் மூவரின் வாக்குகளாலும் ஒரு எம்பியை பெறும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதனையும் என்னால் சொல்ல முடியாது.
ஆனால், இவர்களின் பிரிவினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட ஆசனம் அல்லது ஆசனங்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன என்பதுதான் எனது கணிப்பு. ஆது மட்டுமல்ல ஹிஸ்லாஹ்வின் வெற்றியையும் இந்த பிரிவுகள்தான் இன்று உறுதி செய்துள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையேனும் பெறுவது என்றால் அதனை கடுமையாகப் பெராயெ பெற வேண்டிய நிலைமை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து முன்னர் பிரிந்து சென்ற ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிப்லி பிரிவதற்கு தயாராகவிருந்த சுபைர் ஆகியோருடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள நடத்தி அவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்திருக்க முடியும். இதனை நான்கு நன்கு அறிந்திருந்தேன். அதனை இலகுவாகவும் செய்திருக்கலாம். ஆனால், தவறு நிகழ்ந்து விட்டது என்றுதான கூறலாம். பொறுத்திருந்தான் பார்ப்போமே!
