ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த இப்தார் அரபா நகரில் - சீரெப்.
முஸ்லிம் ஹேண்ட் நிறுவனத்தின் அனுசரணையில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு மீல்குடியேற்றக்கிராமமான அரபா நகரில் இன்று இடெம்பெற்றது. மெளலவி ஹுசைன் அவர்களால் விஷேட பான் நிகழ்வும் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது. ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் தவிசாளர் ஜுனைட் நளீமி உற்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
நிஸ்மி, அக்கரைப்பற்று.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள்; பிரதி முதல்வர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் இன்று 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை பிரதி முதல்வர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.றிஸாம் அவர்களின் அக்கரைப்பற்று – 04 முதலியார் வீதியில் அமைந்துள்ள இல்ல வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி) அவர்களின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஏ.எல்.தவம் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இவ் இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு
(சுலைமான் றாபி)
நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று (03.07.2015) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். எம். சாகிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எல். றபீக், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், நிந்தவூர் விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், இளைஞர் சேவை அதிகாரி ஏ.எம். பைசால் அமீன் உள்ளிட்ட அதிதிகளும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்களும், கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மௌலவி ஏ.இப்றாஹிம் அவர்களால் விஷேட பயானும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





