ஆபூ-இன்ஷாப்-
சம்மாந்துறைப் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நட்புறவு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு அண்மையில் (10) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதீதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப்,பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, முள்ளாள் உதவி தவிசாளர் எம்.ஏ.கலீலுர்றஹ்மான்,உறுப்பினர்களான மீராமுகைதீன் (றியால்) உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச சபையின் ஊழியர்கள் விஷேடமாக தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வில் சம்மாந்துறை உலமா சபையின் பிரதி தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி விஷேட ரமழான் சிந்தனையினை வழங்கினார்.



