பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் ஊடக அமைப்பினால் பொத்துவில் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றெடுக்கும் முகமாக மக்கள் மத்தியில் கவனயீர்ப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி இன்று (18) பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையினை அடுத்து கவனயீர்ப்புப் பிரகடனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறுபட்ட விழிப்புனர்வுப் பதாகைகள் ஊடக அமைப்பினாலும், பொதுமக்களாலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த தேர்தலிலாவது எமது சுயத்தை இழக்காமல் இருப்போம், தனி வலயம் பெற வாக்குகளை தனித்து இடுவோம், கடந்த காலங்களில் மாகாணசபை பிரதிநிதியை இழந்தோம் இப்போது எம்பி பதவியை இழப்பதா?, பொத்துவிலுக்கு தேவை எம்பி இனிமேலும் வெம்பி நம்பி அழிந்து போக மாட்டோம், ஒன்று பட்டால் வென்று விடலாம், ஆகிய வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளை பொதுமக்கள் ஏந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




