எம்.வை.அமீர் -
இதுவரை காலமாக கிழக்குமாகாணத்தில் கல்வியாளர்களை ஒன்றிணைத்து செயற்படக்கூடிய சபை ஒன்று இல்லையே என்ற குறை இப்போது நிவர்த்திக்கப்பட்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை எனும் அமைப்பை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் வைபவமும் இப்தார் நிகழ்வும் 2015-07-13திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அமைப்புக் குழுவின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவிருந்த போதும் தவிர்க்கமுடியாத காரணமாக அவரால் வருகைதர முடியவில்லை அவர் சார்பாக செய்தி ஒன்றை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் எம்.ஐ.நௌபர் நிகழ்வின்போது வாசித்தார்.
இஸ்லாமிய கல்வி மற்றும் அரபு கற்கை பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.எம்.மஸாகிர் அமைப்பின் அவசியப்பாடு சம்மந்தமான மார்க்க ரீதியான ஆதாரங்களுடன் உரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன், பேரவையின் கொள்கைகள் கடந்தகால செயற்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது போன்ற கொள்கை விளக்கமளித்தார்.
இதன்போது கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவைக்கான நிர்வாகத் தெரிவு இதில் எதிர்வரும் 3 வருடங்களுக்கான இவ்வமைப்பின் நிருவாக சபை உத்தியோகத்தர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் : கலாநிதி எம். எஸ். எம். ஜலால்தீன் (மருதமுனை), சிரேஷ்ட விரிவரையாளரும் முன்னாள் பீடாதிபதியும் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
செயலாளர் : எம். எச். எம். நைறூஸ் (மருதமுனை), சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
பொருளாளர் : ஏ. எல். ஆதம்பாவா (சாய்ந்தமருது, CDO & Auditor.
உப தலைவர்கள் : 1. ஏ. எல். எம். ஸலீம் (சாய்ந்தமருது), பிரதேச செயலாளர் - சாய்ந்தமருது.
2. எம். ஐ. எம். சதாத் (சாய்ந்தமருது), நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர்.
உப செயளாளர் : ஏ. ஜே. எல். வஸீல் (மருதமுனை), விரிவுரையாளர் - தேசியக் கல்விக்கல்லூரி, அட்டாளைச்சேனை.
சமூக சேவைகள் இணைப்பாளர் : எம். எச். எம். ஜெஸீல், (மருதமுனை), சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்குப்பல்கலைக்கழகம்
ஊடக இணைப்பாளர் : எப். எம். எஸ். ஏ. அன்ஸார் மௌலானா (மருதமுனை),விரிவுரையாளர் - ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, அட்டாளைச்சேனை.
கல்வித்துறை இணைப்பாளர் : கலாநிதி ஏ. எம். எம். நவாஸ் (மருதமுனை), சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகம்.
அம்பாரை மாவட்ட இணைப்பாளர் : கலாநிதி பீ. எம். ஹம்தூன் (அக்கரைப்பற்று), சிரேஷ்ட விரிவரையாளர் - கிழக்குப்பல்கலைக்கழகம்.
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் : எம். டி. எம். றிஸ்வி (வாழைச்சேனை), சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்குப்பல்கலைக்கழகம்.
திருமலை மாவட்ட இணைப்பாளர் : எம். டி. ஹபீபுல்லாஹ் (கிண்ணியா), உதவி விரிவுரையாளர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
உயர் பீட உறுப்பினர்கள் :
எம். ஐ. நௌபர் (சாய்ந்தமருது), பிரதிப் பதிவாளர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம்
எஸ். எம். எம். மஸாஹிர் (அக்குரணை)ää பீடாதிபதி, இஸ்லாமியக் கற்கைகள் மற்றம் அரபு மொழி பீடம் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
எம். எச். எம். மன்சூர் (கல்முனை), உப பீடாதிபதி - தேசியக் கல்விக்கல்லூரி,அட்டாளைச்சேனை.
கலாநிதி எம். ஐ. ஏம். ஜெஸீல் (சாய்ந்தமருது), சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஏ. ஆர். அறூஸ் (தோப்பூர்) அபிவிருத்தி உத்தியோகத்தர்.
கலாநிதி எம். ஐ. எம். கலீல் (சம்மாந்துறை), சிரேஷ்ட விரிவுரையாளர் - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
எஸ். எம். அஸ்லம் மௌலானா (சாய்ந்தமருது), ஊடகவியலாளர்.
பீ. எம். எம். ஏ. காதர் (மருதமுனை), சிரேஷ்ட ஊடகவியலாளர்
யூ. கே. எம். முஹீஸ் (அட்டாளைச்சேனை), ஆசிரியர்.
ஏ. எல். ஏ. றஸசூல் (நிந்தவூர்), முன்னாள் பீடாதிபதி - தேசியக் கல்விக்கல்லூரி,அட்டாளைச்சேனை.
மேற்படி நிருவாக உத்தியோகத்தர்களோடு, அமைப்புக்கான சட்ட ஆலோசகராக எம். எஸ். எம் ஜெமீல் (மருதமுனை) சிரேஷ்ட சட்டத்தரணி அவர்களும் ஆலோசகராக னுச. எம். ஐ. எம். ஜெமீல் (சாய்ந்தமருது) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.





