சமையல் எரிவாயுக் கசிவு -வீடு தீயினால் முற்றாக சேதம்-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி-3, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயுக் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

நேற்று (17) நன்பகல் 12.15 மணியலவில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றிலிருந்து எரிவாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளது. விட்டிலிருந்த பொருட்கள் பல எரிந்துள்ளது.

குறித்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேறியதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -