வாழைச்சேனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடு ஒன்று முற்றாக தீயினால் தீக்கிரையாகி உடமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் காணப்பட்டது.
விநாயகபுரம் தாமரைக்கேணி மூன்றாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கூலி தொழில் வேலை செய்யும் பத்மராஜ் டினேஸ் (21 வயது) என்பவரின் குடிசை வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
தானும் மனைவி மற்றும் நான்கு மாத குழந்தையுடன் பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்திற்கு இரவு சென்று விட்டு பின் அதிகாலை வீடு திரும்பிய போது வீடு தீக்கிரையாகி அனைத்து உடமைகள் மற்றும் உடைகள், துவிச்சக்கரவண்டி, தொலைக்காட்சி என பல பொருட்கள் தீயில் சேதமடைந்து காணப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் ப.டினேஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டு, சேதம் தொடர்பாக கேட்டறிந்ததுடன், சிறுதொகைப் பண உதவியையும் வழங்கி வைத்தார்.



