கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீரின் ஊடக அறிக்கை

அபூ-இன்ஷாப்-

ம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசம் கடந்த ஒருதசாப்தகாலமாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றன.
இதனை மீளப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் சம்மாந்துறை மக்களும் சம்மாந்துறையின் உயர் சபைகளான உலமாசபை, மஜ்லிஸ் அஸ்ஸூறா, நம்பிக்கையாளர் சபை, அனைத்து பள்ளிவாசல்கள் என்பன பல்வேறு பிராயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டும் சம்மாந்துறை மன்னுக்குரிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இந்தப் பொதுத் தேர்தலின் போது பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற தூர நோக்கோடும் எமது ஊரின் உயர் சபையினதும் வேண்டு கோளுக்கு அமைவாகவும் இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்தப் பொதுத் தேர்தலின் போது தான் எந்த தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் பலர் பல கட்சிகளில் போட்டியிடுவதனால் பாராளுமன்றப்பிரதி நிதித்துவம் இல்லாமல் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளியாக தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே சம்மாந்துறை மக்கள் கடந்த ஒருதசாப்தகாலமாக விட்ட தவரை மீண்டும் மீண்டும் செய்து பிரிந்து விடாமல் சம்மாந்துறையை சேர்ந்த தகுதியானவர் என்று கருதுகின்ற ஒருவரை அதாவது சம்மாந்துறையின் பாராளுமன்ற உறுப்பினர் என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்மானமுள்ள ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப ஒன்று சேர்ந்து உழைக்குமாறும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -