'இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள தமிழ்நாடு தொல்காப்பிய பேரவை ஆதித்தியா ஹோட்டலில் நடைபெற்றது.
எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதிய இந்நூலின் முதற்பிரதியை இலக்கிய செம்மல் குமரி ஆனந்தனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் எச்.வீ.ஹாண்டே, இலக்கிய செம்மல் குமரி ஆனந்தன், நடிகர் எஸ்.வீ.சேகர், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பாரதிய ஜனதா தமிழ்நாடு துணைத்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் நூலாசிரியர் சதீஷ்குமார்.


