எதிர்வரும் 10 வருடத்திற்குள் நாட்டின் அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என அக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கைப்பற்றிய பின்னர் முடியுமானால் நாட்டின் பெயரையும் மாற்றிவிடுவோம் என அவர் கூறியுள்ளார்.
அதிகாரத்தில் இருக்கும் போது பலர் பணத்தை சேர்த்துக்கொண்டு தற்போது செலவு செய்கின்றார்கள். எனினும் சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் இருந்தார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
