காத்தான்குடியில் ஒரே வீட்டில் இரு சடலங்கள் மீட்பு!


ட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதியில் தாயும் மகனும் வீடொன்றினுள் மர்மமான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸர் தெரிவித்தனர்.

ஆரையத்பதி எல்லை வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய செல்லத்தம்பி சிவபாக்கியம் அவரது மகனான 50 வயதுடைய செல்லத்தம்பி அமிர்தகுமார் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதற்கமைய சடலங்கள் இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

மரணமான மகன் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தாய் நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டிருந்தவர் என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.vi
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -