வித்தியா கொலை : மேலும் ஒரு முக்கியஸ்தர் கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவரை கைது செய்தோம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

நயினாதீவை சேர்ந்த கு.நாகதர்சன் (25) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியா கொலை காமுகர்களின் நெருங்கிய நண்பனாக இவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான குற்றவாளிகளில் ஒருவனான பிரதேச சபை பணியாளனுடன், இந்த நபரும் பணியாற்றி வந்துள்ளார். வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உபஅலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று மதியம் இவர் அலுவலகத்தில் இருந்த சமயத்தில் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வு பொலிசார் கைது செய்துள்ளனர்.


வித்தியா படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் என ஏற்கனவே ஒன்பதுபேர் கைதாகியுள்ளமை தெரிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -