ஏறாவூர்- புன்னக்குடா வீதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சாரதியொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் –ஆர்சி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் றஸ்ஸாக் என்பவரே விபத்தில் சிக்கியவர்.
புன்னக்குடா வீதியில் ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கருகிலுள்ள வீதி வளைவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. இதில் ஒரு வண்டி முழுமையாகச் சேதமடைந்து சாரதி மிகவும் ஆபத்தான நிலையில் விழுந்து கிடக்க மற்றைய வண்டி தப்பிச் சென்றுள்ளது. வீதியில் சென்ற பொதுமக்கள் அவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பச்சை நிறமுடைய அந்த முச்சக்கர வண்டியின் இலக்கம் பொது மக்களினால் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் தொடருகின்றன.
ஏ.எம் றிகாஸ்


